பாலியல் சீண்டலா... பி.ஜே.பி தூண்டலா? - நீதிபதிமீது பாய்ந்த பாலியல் புகார்! | Sexual harassment allegations against Chief Justice of India Ranjan Gogoi - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/04/2019)

பாலியல் சீண்டலா... பி.ஜே.பி தூண்டலா? - நீதிபதிமீது பாய்ந்த பாலியல் புகார்!

தேச மக்களின் உரிமைகளுக்கு எல்லாம் உச்சக்கட்ட பாதுகாவல், உச்ச நீதிமன்றம்தான். ஆனால், அதன் தலைமை நீதிபதி மீதே பாலியல் சீண்டல் புகார் எழுந்திருப்பது, நாட்டையே அதிர வைத்துள்ளது. புகார் செய்திருக்கும் பெண், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயுடன் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியவர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பிரதமர் அலுவலகம், டெல்லி முதல்வர் அலுவலகம், ஊடகம் என்று பலதரப்புக்கும் அந்தப் பெண் புகார் மனு அனுப்பியுள்ளார்.

மேற்கண்ட புகார்களில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தன்னிடம் தவறாக நடக்க ரஞ்சன் கோகோய் முயன்றதாகவும், அதற்கு ஒத்துழைக்க மறுத்ததால், ஒரே வாரத்தில், மூன்று இடங்களுக்குப் பணிமாற்றம் செய்து, ஒழுங்கு நடவடிக்கை என்கிற பெயரில் பணியிலிருந்து நீக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

‘பொய்யான லஞ்சப் புகார் அளித்து என்னைக் கைதுசெய்தனர். போலீஸ் வேலையிலுள்ள என் கணவர், கணவரின் தம்பி ஆகியோரைக் காரணமின்றி சஸ்பெண்ட் செய்தனர். என் கணவரின் மற்றொரு தம்பியை மாற்றுத் திறனாளி என்றும் பாராமல், நீதிமன்ற உதவியாளர் பணியிலிருந்து காரணம் குறிப்பிடாமல் நீக்கியுள்ளனர்’ என்று அவரது குற்றச்சாட்டுகள் நீள்கின்றன.