கழுகார் பதில்கள்! | Kazhugar Questions And Answers - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/04/2019)

கழுகார் பதில்கள்!

பி.பாலு, திண்டிவனம்.
‘வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை’ என்பதற்காகச் சாதாரண மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை மறுத்தத் தேர்தல் ஆணையம் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் போன்ற நடிகர்களை மட்டும் அனுமதித்தது எப்படி?


தேர்தல் ஆணையம் ஏற்கெனவே செய்திருக்கும் ஆயிரம் தவறுகளில் மற்றுமொன்றும் சேர்ந்துள்ளது. இதைப் பற்றிக் கேட்டால், ‘சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரியின் முடிவு. அதில் தலையிட யாருக்கும் அதிகாரமில்லை’ என்கிற அதிகாரமான பதில்தான் வரும். பிரபலமானவர்கள் என்றால் ஒரு நியாயம்...எளிய மக்கள் என்றால் ஒரு நியாயம் என்கிற இந்த மனநிலை எப்போதுதான் மாறுமோ?