“அ.தி.மு.க தினகரன் பின்னால் வராது!” - கிருஷ்ணப்ரியா அதிரடி... | Sasikala relative Krishnapriya interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/04/2019)

“அ.தி.மு.க தினகரன் பின்னால் வராது!” - கிருஷ்ணப்ரியா அதிரடி...

ஜெயலலிதா இருந்தவரை அ.தி.மு.க-வின் அதிகாரம் மிக்க சக்திகளாக வலம்வந்தவர்கள், சசிகலாவின் குடும்ப உறவினர்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் ஏற்பட்ட விரிசல்கள், சசிகலா குடும்பத்துக்குள்ளேயும் பிளவுகளை ஏற்படுத்தி யிருக்கிறது. குறிப்பாக, தினகரனுக்கு எதிராக இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில், அ.ம.மு.க-வின் பொதுச் செயலாளராக டி.டி.வி தினகரன் நியமிக்கப்பட்டது குறித்து அவரிடம் சில கேள்விகளை எழுப்பினோம்.

“தினகரன் அ.ம.மு.க-வின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து?”

‘‘என் அத்தை சசிகலா சொன்னார் என்ற ஒரே காரணத்தினால், தங்கள் பதவிகளைத் துறந்து, தினகரனின் பின்னால் நின்ற உண்மையான அ.தி.மு.க விசுவாசிகளுக்கு, தினகரனின் இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை அளிக்கும். இவை அனைத்துமே தினகரனால் ஏற்கெனவே திட்டமிட்டு, அதன்படி அரங்கேறுகின்றன. என்னைப் பொறுத்தவரை இந்த நிகழ்வு ஒரு கேலிக்கூத்து.”