நச்சுப்புகை...... அச்சத்தில் மக்கள் - தேர்தலைப் புறக்கணித்த கிராமம்! | Chain protest and Election boycott in Maduranthakam K.pudur - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/04/2019)

நச்சுப்புகை...... அச்சத்தில் மக்கள் - தேர்தலைப் புறக்கணித்த கிராமம்!

படங்கள்: ரவிக்குமார்

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே கே.புதூர் கிராமத்திலிருக்கும் நச்சுக்கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலையை அகற்றக் கோரி கடந்த இருபது நாள்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டம் நடத்திவருகிறார்கள் அந்த கிராம மக்கள். ஆனால், தேர்தல் பரபரப்பில் அவர்களின் போராட்டம் வெளியே தெரியாமல் போனதுதான் வேதனை. மேலும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்துமுடிந்த தேர்தலையும் புறக்கணித்திருக்கிறார்கள் கிராம மக்கள். சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தோம்.