“நாங்க மதுரக்காரய்ங்க!” - தேர்தலைத் தோற்கடித்த சித்திரைத் திருவிழா! | Madurai Chithirai Thiruvizha Celebration - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/04/2019)

“நாங்க மதுரக்காரய்ங்க!” - தேர்தலைத் தோற்கடித்த சித்திரைத் திருவிழா!

கோயில் நகரம் என்பதாலேயே திருவிழாக்களுடன் பின்னிப்பிணைந்த ஊர் மதுரை. அதனாலேயே, உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாடாளுமன்றத் தேர்தலையே, உற்சாகம் இழக்க செய்துவிட்டது மதுரை மண்ணின் மாபெரும் சிறப்புக்குரிய சித்திரைத் திருவிழா!

மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி நடக்கும் மீனாட்சியம்மன் தேரோட்டம் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை ஆகியவை தமிழகத்தின் தனிப்பெரும் கலாசார அடையாளங்கள். இந்த நாள்களில், மதுரை மக்களின் முழுக்கவனமும் திருவிழாவில்தான் இருக்கும். தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் மக்கள் மதுரையில் மையம் கொள்வர். அழகர் இறங்கும் வைகை ஆற்றில் தண்ணீர் இல்லாவிட்டாலும், மக்களின் மனதில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோடும். இப்படிப்பட்ட கொண்டாட்ட மனநிலையை, திண்டாட்ட மனநிலையாக்கி மக்களைக் கொந்தளிக்க வைத்துவிட்டது தேர்தல் ஆணையம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க