என்று அணையும் இந்த சாதி தீ? - பொன்னமராவதியும் பொன்பரப்பியும்! | Ponparappi and Ponnamaravathi incidents - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/04/2019)

என்று அணையும் இந்த சாதி தீ? - பொன்னமராவதியும் பொன்பரப்பியும்!

மிழகத்தின் ஒற்றுமைக்குக் கொள்ளிவைக்கும் சாதித் தீயை அணையவிடாமல் காப்பதில் அரசியலுக்குப் பெரும் பங்குண்டு. மற்ற காலங்களில் நீறு பூத்திருக்கும் இந்த நெருப்பு, தேர்தல் காலத்தில் பெரும் தீயாக கொளுத்தப்படுகிறது. சாதியின் பெயரால் நடக்கும் இந்த சதி, இப்போது பொன்னமராவதி, பொன்பரப்பி ஆகிய இரு ஊர்களின் அமைதியைப் பொசுக்கியிருக்கிறது.

பொன்னமராவதியில் நடந்தது என்ன?

புதுக்கோட்டை மாவட்டத்தில் கணிசமாக வாழும் முத்தரையர் சமூக மக்கள் பற்றி, வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த இருவர் பேசிய பேச்சு, காணொளியில் பரப்பப்பட்டதால் பதற்றம் பரவியது. இதனால், அந்தச் சமூக மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பொன்னமராவதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். காவல் நிலையத்தின்மீது கல்வீச்சு நடக்க, போராட்டக் காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வானத்தை நோக்கி இரு முறை துப்பாக்கியால் சுட்டது போலீஸ். தடியடியும் நடந்தது. பொதுமக்கள், போலீஸார் என இரு தரப்பிலும் சிலர் காயமடைந்தனர்.