மலையெங்கும் முளைக்கும் கட்டடங்கள்... ஆபத்தின் உச்சத்தில் நீலகிரி! | Rules Violation Buildings in Nilgiris - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/01/2019)

மலையெங்கும் முளைக்கும் கட்டடங்கள்... ஆபத்தின் உச்சத்தில் நீலகிரி!

‘மே 31 நள்ளிரவு 12 மணிக்கு மேல், அதிகாலைக்குள் தென்மேற்குப் பருவமழையின் முதல் மழை, நீலமலையை நனைத்துவிடும்’ - இப்படி அத்தனைத் துல்லியமாக, இயற்கையுடன் பிணைந்துகிடந்ததாக நீலகிரியைப் பற்றிய தனது ஆவணத்தில் பதிவுசெய்திருக்கிறார், நீலகிரி கெஜட்டைத் தயாரித்த ஆங்கிலேய ஆய்வாளர் டபிள்யு.பிரான்சிஸ். ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். உதகையில் இருந்த பர்ன் ஃபுட் ஏரி இன்று இல்லை. ஏரி இருந்ததற்கான ஆவணம்கூட உதகை நகராட்சியில் இல்லை. ஆனால், பிரபலப் புகைப்படக் கலைஞரான ஏ.டி.டபுள்யூ.பென்

1900-களின் தொடக்கத்தில் இந்த ஏரியைப் புகைப்படம் எடுத்திருக்கிறார். இன்று ஏரி இருந்த இடத்தில் போர்வெல் போட்டு நூற்றுக்கணக்கான லாரிகளில் நிலத்தடி நீரை எடுத்துச்செல்கிறார்கள்! 

இவையெல்லாம் உதாரணங்கள்தான். ஒருகாலத்தில் சோலைக்காடாக இருந்த நீலகிரி, இப்போது கான்கிரீட் காடாகிவிட்டது. கடந்த பத்தாண்டுகளில், விதிகளை மீறிய கட்டடங்கள் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றன. கட்சிப் பாகுபாடின்றி அனைத்து அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நீலகிரியின் இயற்கை வளங்களைச் சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள்.