அரசு ஊழியர்கள் எத்தனைப் பேர் நேர்மையாக உழைக்கிறார்கள்? | Discuss about Teachers Protest - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/01/2019)

அரசு ஊழியர்கள் எத்தனைப் பேர் நேர்மையாக உழைக்கிறார்கள்?

செந்தில் ஆறுமுகம், பொதுச் செயலாளர், சட்டப் பஞ்சாயத்து இயக்கம்

ஜாக்டோ ஜியோவின் போராட்டம் முடிவுக்கு வராது என்றே தெரிகிறது. சரி, இவர்களின் கோரிக்கை நியாயம்தானா? பார்ப்போம். 2003, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (சி.பி.எஸ்) ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடரவேண்டும் என்பதுதான் இவர்களின் முக்கியக் கோரிக்கை. 2003-க்குப் பின்னர் பணியில் சேர்ந்து, ஓய்வுப்பெற்றப் பலருக்கும் ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கவில்லை. அதேபோல், சி.பி.எஸ் ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம்செய்யப்பட்ட தொகை என்ன ஆனது என்று அரசு தெளிவுப்படுத்தவில்லை. எனவே, தங்களின் ஓய்வூதியப் பணத்துக்கு உத்தரவாதம் இல்லை என்று போராடுகிறார்கள் அரசு ஊழியர்கள்.