மிஸ்டர் கழுகு: கூட்டணி ஜல்லிக்கட்டு... எடப்பாடி சடுகுடு... மோடி கடுகடு! | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/01/2019)

மிஸ்டர் கழுகு: கூட்டணி ஜல்லிக்கட்டு... எடப்பாடி சடுகுடு... மோடி கடுகடு!

சிறகுகளைப் படபடத்தபடி வந்து இருக்கையில் அமர்ந்த கழுகார், “ம், ஆரம்பிக்கலாம்” என்றார் ராஜதோரணையில்.

“மதுரைக்கு பிரதமர் மோடி வந்து போகும்முன், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி விவகாரம் முடிவுக்கு வந்துவிடும் என்று சொன்னார்கள். ஆனால், ஒன்றுமே நடக்கவில்லையே?’’ என்றோம்.

‘‘கூட்டணி விவகாரம் உடனே முடிவுக்கு வராது என்பதுதான், இப்போதைய நிலைமை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல்நாட்டு விழாவுக்கு வரும்போது, கூட்டணி பற்றி ஏதாவது பேசப்படும் என்றுதான், அ.தி.மு.க., பி.ஜே.பி என இரு கட்சியினரும் எதிர்பார்த்தனர். அது நடப்பதற்கான சூழ்நிலையே அங்கு இல்லை!’’

‘‘ஏன்?’’

‘‘மதுரை விமான நிலையத்தில் தரை இறங்கியவுடனே, மோடியின் முகத்தில் புன்னகை மாயமாகிவிட்டது. மண்டேலா நகரில் நடந்த எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றவர், அங்கும் யாரிடமும் சிரித்துப் பேசவில்லை. பெயருக்கு ஏழு நிமிடங்கள் பேசிவிட்டுக் கிளம்பிவிட்டார். பிரதமரின் ஆங்கில உரையைத் தமிழில் மொழிபெயர்க்க ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை.”

‘‘ஏதோ வேண்டா வெறுப்பாக விழா நடத்தப்பட்டது போலிருந்ததே!’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க