தேர்தலுக்காக விட்டுக்கொடுத்தல்கள் தவறு இல்லை! | VCK leader Thirumavalavan interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/01/2019)

தேர்தலுக்காக விட்டுக்கொடுத்தல்கள் தவறு இல்லை!

மு.க.ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்களைத் திரட்டி, திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய ‘தேசம் காப்போம்’ மாநாட்டில் முன்வைக்கப்பட்ட முக்கியக் கேள்வி, ‘சனாதனமா... ஜனநாயகமா?’ என்பதுதான். அந்த மாநாட்டில் பேசிய ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்டோர் சனாதானக் கோட்பாட்டைக் கடுமையாக விமர்சித்தனர். அதற்கு பி.ஜே.பி தரப்பிலிருந்து எதிர் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உங்களை, ‘மதவெறித் தீயைப் பரப்பும் சாதிவெறியாளர்’ என்கிறாரே?’’

‘‘இந்துத்துவத்துக்கு எதிராகப் பேசினால், ‘இந்துக்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள்’ என்று திரித்துப் பேசுவார்கள். நாங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படையான ‘சனாதனம்’ என்ற கொடூரக் கோட்பாட்டை எதிர்த்துப் பேசிவருகிறோம். இது பி.ஜே.பி-யின் மென்னியைப் பிடித்துத் திருகுகிறது. அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல்தான், காழ்ப்பு உணர்ச்சியுடன் தனிநபர்கள் மீது இப்படி அபாண்டமான குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்கள்!’’