“அலறவிடுகிறார் அமைச்சரின் உதவியாளர்!” - கதறும் வேலூர் காக்கிகள்... | Minister Veeramani Assistant atrocities in Vellore District - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/01/2019)

“அலறவிடுகிறார் அமைச்சரின் உதவியாளர்!” - கதறும் வேலூர் காக்கிகள்...

ணல் கொள்ளையை போலீஸார் கண்டுகொள்வதில்லை என்று பல இடங்களில் புகார்கள் உள்ள நிலையில், ‘மணல் கொள்ளையைத் தடுத்ததால் எங்களை டிரான்ஸ்ஃபர் செய்கிறார்கள்’ என்று அலறுகிறார்கள் வேலூர் மாவட்ட போலீஸார். இதற்கெல்லாம் காரணம் என்று அமைச்சர் கே.சி.வீரமணியின் உதவியாளர் ஷியாம்குமாரைக் கைக்காட்டுகிறார்கள் பாதிக்கப்பட்ட காவல்துறையினர்.

அரக்கோணம் கிழக்கு தர்மராஜா கோயில் தெருவைச் சேர்ந்தவர், ஷியாம்குமார். அ.தி.மு.க-வில் வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருக்கும் இவர், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் உதவியாளர்களில் ஒருவர். இவர்மீதுதான், காவல்துறை வட்டாரத்தில் இப்படியொரு புகார் வாசிக்கப்படுகிறது. நம்மிடம் பேசிய போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், “அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டை வட்டாரங்களில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு ஷியாம்குமாரின் ஆட்கள் பக்கபலமாக இருந்துவருகிறார்கள். மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள்மீது எங்களால் நடவடிக்கை எடுக்கமுடியாத அளவுக்கு இவரது தலையீடு இருக்கிறது. எந்த போலீஸாராவது தனது பேச்சைக் கேட்கவில்லை யென்றால், தன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்களை டிரான்ஸ்ஃபர் செய்துவிடுகிறார். சில உயர் அதிகாரிகளின் அந்தரங்க விவகாரங்கள் இவருக்குத் தெரியும் என்பதால், அவர்கள் இவர் சொல்கிறபடி நடந்துகொள்கின்றனர்” என்று குமுறினார்.