RTI அம்பலம்: சிறுநீரக நோயாளிகளின் உயிரோடு விளையாடும் தமிழக அரசு! | RTI about Kidney patients Dialysis - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/02/2019)

RTI அம்பலம்: சிறுநீரக நோயாளிகளின் உயிரோடு விளையாடும் தமிழக அரசு!

காட்சிப் பொருளாகிய டயாலிசிஸ் எந்திரங்கள்...

“தமிழகத்தில் 17.5 கோடி ரூபாய் செலவில் 200 நவீன டயாலிசிஸ் எந்திரங்கள் நிறுவப்படும்” என்று 2018, ஜூலை 14-ம் தேதி சட்டமன்றத்தில் அறிவித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இதையடுத்து, “ஏற்கெனவே, 2017-ம் ஆண்டு இறுதியில் தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு 100 டயாலிஸிஸ் எந்திரங்கள் வழங்கப்பட்டன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை பயன்பாட்டுக்கு வராத நிலையில், புதிதாக 200 எந்திரங்கள் எதற்காக வாங்கப்படுகின்றன” என்று சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து விகடன் தகவல் உரிமைக் குழு தகவல்களைத் திரட்டியது. இதில் தமிழகத்தில்  ஆயிரக்கணக்கான சிறுநீரக நோயாளிகள் அரசின் அலட்சியத்தால், தினமும் எப்படியெல்லாம் செத்துப்பிழைக்கிறார்கள் என்கிற அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. அந்தத் தகவல்களின் தொகுப்பே இந்தக் கட்டுரை.

இந்தியாவில் சுமார் எட்டு லட்சம் சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யவேண்டிய அவசியத்தில் உள்ளனர். இவர்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் தானமாக கிட்னியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இவர்கள் வாரத்துக்கு இருமுறை டயாலிசிஸ் சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவருக்கு டயாலிசிஸ் செய்ய நான்கு மணி நேரம் ஆகும். மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 600 டயாலிசிஸ் எந்திரங்கள்தான் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், தமிழகத்தின் தேவையைப் பூர்த்திசெய்ய மூவாயிரம் எந்திரங்கள் தேவை என்கிறார்கள் சிறுநீரக மருத்துவ வல்லுநர்கள்.

தனியார் மருத்துவமனையில் ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கில் செலவுசெய்து சிகிச்சை பெறமுடியாத நோயாளிகள்தான், அரசு மருத்துவமனையை நாடுகிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் உரிய சிகிச்சையைப் பெறமுடியாவிட்டால், உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இப்படியான நிலையில்தான் பலகோடி ரூபாய் செலவழித்து வாங்கப்பட்ட எந்திரங்களைப் பயன்படுத்தாமல் மூலையில் போட்டுவைத்திருக்கிறது, சுகாதாரத் துறை. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ மனைகளில் உள்ள 600-க்கும் மேற்பட்ட எந்திரங்களை மூன்று ஷிப்டுகளுக்கும் பயன் படுத்தினால், நாள் ஒன்றுக்கு 3,600 நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க முடியும். ஆனால், தற்போது ஆயிரம் நோயாளிகளுக்குக்கூட டயாலிசிஸ் செய்யப்படுவதில்லை. காரணம் கேட்டால், சுத்திகரிக்கப்பட்டத் தண்ணீர் பற்றாக்குறை, இடப்பற்றாக்குறை, டெக்னீஷியன் கள் பற்றாக்குறை என்று பட்டியலிடுகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க