சசிகலாவும் இளவரசியும் சிறையில் கஷ்டப்படுகிறார்கள்! | AMMK Karnataka leader Pugazhenthi interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/02/2019)

சசிகலாவும் இளவரசியும் சிறையில் கஷ்டப்படுகிறார்கள்!

‘கர்நாடக’ புகழேந்தி பேட்டி

சிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறையில் விதிமுறைகளை மீறிச் சிறப்பு வசதிகள் செய்துகொடுக்கப்பட்ட விவகாரம் முடிவுக்கு வரவில்லை. அந்தப் புகாரை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய் தனது விசாரணை அறிக்கையில், ‘சிறையில் சலுகைகளுக்காக லஞ்சம் கொடுக்கப்பட்டதா என்ற புகாரை லஞ்ச ஒழிப்புத் துறைதான் விசாரிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து முன்னாள் டி.ஜி.பி சத்ய நாராயணா, டி.ஐ.ஜி ரூபா ஆகியோரிடம் விசாரணை நடத்திய கர்நாடக மாநில லஞ்ச ஒழிப்புத் துறையினர், கர்நாடக மாநில அ.ம.மு.க செயலாளரான வழக்கறிஞர் புகழேந்தியிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில், கட்சி வேலைகள் தொடர்பாக மதுரை வந்தவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.