“என் மகனை விட்டுடுங்க... ஒரு ஓரமாக வாழ்ந்துக்கிறோம்” | Arputham Ammal meet people for Perarivalan release - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/02/2019)

“என் மகனை விட்டுடுங்க... ஒரு ஓரமாக வாழ்ந்துக்கிறோம்”

கண்கலங்கிய அற்புதம் அம்மாள்...

ற்புதம் அம்மாள்... 28 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் மகனை மீட்கும் போராட்டத் தீயில் தவிப்போடு நிற்கும் தாய். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு தமிழர்கள் விடுதலையில், ‘தமிழக அரசு முடிவு எடுக்கலாம் ’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பெழுதி நூறு நாள்கள் கடந்து விட்டன. தீர்ப்பை அமல்படுத்தும்படி கவர்னருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரைத்துவிட்டது. ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான், மக்களிடம் நியாயம் கேட்டு நடைப்பயணம் தொடங்கி யுள்ளார் அற்புதம் அம்மாள்.

கோவையில் கடந்த ஜனவரி 24-ம் தேதி, அற்புதம் அம்மாளின் முதல் மக்கள் சந்திப்புத் தொடங்கியது. அந்தக் கூட்டத் தில் பேசிய அற்புதம் அம்மாள், ‘‘எனக்கு 71 வயசு ஆகிருச்சு. என் மகன் அறிவுக்கு 47 வயசு. நான் சாகுறதுக்குள்ள என் மகனோடு கொஞ்ச நாளாச்சும் சேர்ந்து வாழணும்ப்பா’’ எனக் கைகூப்பிக் கேட்க... கண்ணீரோடு தொடங் கியது கூட்டம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க