அப்பாவிகளைத் தாக்கிய போலீஸார்... - அதிரடி தீர்ப்பளித்த மனித உரிமைகள் ஆணையம்! | State Human Rights Commission Judgement against police - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/02/2019)

அப்பாவிகளைத் தாக்கிய போலீஸார்... - அதிரடி தீர்ப்பளித்த மனித உரிமைகள் ஆணையம்!

விசாரணை என்ற பெயரில் குற்றச் சம்பவத்துக்குத் தொடர்பு இல்லாதவர்களைக் கொடுமை செய்வது போலீஸாரின் விசாரணை பாணிகளில் ஒன்று. அதற்கு குட்டு வைக்கும் வகையில், சென்னையில் பெண் கொலை வழக்கு தொடர்பான விசாரணையின்போது பெண்ணின் கணவரையும், மகனையும் தாக்கிய போலீஸார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.