மிஸ்டர் கழுகு: நெருங்கும் தேர்தல்... உச்சத்தில் ஊழல்! - செருப்பு முதல் பருப்பு வரை! | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/02/2019)

மிஸ்டர் கழுகு: நெருங்கும் தேர்தல்... உச்சத்தில் ஊழல்! - செருப்பு முதல் பருப்பு வரை!

சிரிப்புப் பொங்க அலைபேசியில் பேசிக்கொண்டே வந்த கழுகார், பேசி முடித்ததும், ‘‘ஒரு நிகழ்வைச் சொல்கிறேன்... நீரும் சிரிப்பீர்’’ என்று பீடிகைபோட, ‘‘சொல்லும் சொல்லும்!’’ என்று உற்சாகம் காட்டினோம்.

‘‘கடந்த ஆண்டில் சென்னைக்குப் பிரதமர் வந்திருந்தபோது, தமிழக அமைச்சர்கள் வரிசையாக நின்று அவரை வரவேற்றனர். அவர்கள் ஒவ்வொருவரையும், ‘இவர் வேலுமணி, இவர் தங்கமணி, இவர் வீரமணி, இவர் மணிகண்டன்’ என்று சொல்லி அறிமுகப் படுத்தினார் ஓர் அதிகாரி. உடனே பிரதமர், ‘‘ஓ! ஆல் மணிஸ் ஆர் ஹியர்!’’ என்று சொல்லிக்கொண்டே சிரித்தபடிக் கடந்திருக்கிறார். இந்த கமென்ட், ஐ.ஏ.எஸ் வட்டாரத்தில் அப்போது வைரலானது.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க