வேட்டையாடப்படும் வெனிசூலா... அமெரிக்காவின் சதி பலிக்குமா? | Venezuela political crisis reaches boiling point - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/02/2019)

வேட்டையாடப்படும் வெனிசூலா... அமெரிக்காவின் சதி பலிக்குமா?

த்து வருடங்களுக்கு முன் லத்தின் அமெரிக்காவின் அதிக எண்ணெய் வளமுள்ள ஒரு பணக்கார நாடாகத் திகழ்ந்த வெனிசூலா இன்று வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியால் சீரழிந்து, அரசியல் ஸ்திரத்தன்மை இழந்து கலவர பூமியாகியுள்ளது. மக்கள் போராட்டம் உச்சத்தை அடைந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் குவான் குவாய்டோ, அமெரிக்காவின் ஆசியுடன் வெனிசூலாவின் இடைக்கால அதிபராகத் தன்னை அறிவித்துக் கொண்டுள்ளார். அதிபர் மடூரோ தன் அதிகாரத்தை நிலைநாட்டவும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை ஒடுக்கவும் ராணுவத்தைப் பயன்படுத்த முடிவுசெய்துள்ளார். ரத்தம் சிந்த தயாராகி வருகிறது வெனிசூலா.

ஒருகாலத்தில் வளம் மிக்க நாடாக இருந்த வெனிசூலா, சோஷலிச சித்தாந்தங்களின் இதயத்துடிப்பாக மாறி, 1998-ல் சோஷலிச கொள்கைகளை முன்னிறுத்தியது. அப்போது ஆட்சியைப் பிடித்த ஹூகோ சாவேஸின் ஆட்சிக்காலம் வெனிசூலாவுக்கு ஒரு பொற்காலம். அவர் காலத்தில் அந்நியச் சக்திகள் வெளியேற்றப்பட்டு, நாட்டின் பொருளாதாரத்துக்கு அடிப்படையான எண்ணெய் வளங்கள் தேசிய மயமாக்கப்பட்டன. அன்னிய முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்களின் நிலங்கள் அரசு உடைமையாக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்பட்டன. கச்சா எண்ணெய் ஏற்றுமதியின் வருவாயைக் கொண்டு, சாவேஸ் பல சமூக, நலவாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்தினார். மேற்கு நாடுகளின் தடைகளற்ற வர்த்தகத்துக்குச் சிறந்த மாற்றாகவும், வளர்ச்சிக்கு உதாரணமாகவும் விளங்கியது வெனிசூலா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க