விதிமீறல் நிறுவனங்களுக்கு சீல்! - அதிரடி காட்டும் நாகர்கோவில் ஆணையாளர்! | Nagercoil 'Seal' deposits to 4 buildings built in violation - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/02/2019)

விதிமீறல் நிறுவனங்களுக்கு சீல்! - அதிரடி காட்டும் நாகர்கோவில் ஆணையாளர்!

நாகர்கோவிலில் விதிமுறைகளை மீறிக் கட்டடம் கட்டியதாகத் தினமும் பல நிறுவனங்களுக்குச் ‘சீல்’ வைத்து அதிரடி காட்டுகிறார் நாகர்கோவில் நகராட்சி ஆணையாளர் சரவணகுமார். பிரபலப் பெரிய நிறுவனங்களும் இவரது அதிரடி நடவடிக் கைக்குத் தப்பவில்லை. அமைச்சர் தொடங்கி உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் வரை இவரது நடவடிக்கைக்கு எதிராக அழுத்தம் கொடுத்தும், எதற்கும் அசராமல் கையில் நீண்ட பட்டியலுடன் கிளம்பியிருக்கும் ஆணையாளரின் அதிரடியால் கதிகலங்கிக் கிடக்கிறார்கள் விதிமுறைகளை மீறிய நாகர்கோவில் வணிகர்கள். இதற்கிடையே ஆணையாளரின் அதிரடி நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேரக் கிளம்பியிருக்கிறது.