முதலில் மனைவிக்கு மொட்டை அடித்து டார்ச்சர்... பின்பு தலையை வெட்டி கொடூரம்... | cinema director killed his wife in chennai - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/02/2019)

முதலில் மனைவிக்கு மொட்டை அடித்து டார்ச்சர்... பின்பு தலையை வெட்டி கொடூரம்...

சந்தேகத்தின் சம்பளம் கொலை!

சினிமாவில் வரும் காட்சிகள் சென்னையில் நிஜமாகியிருக்கின்றன. சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் வெட்டப்பட்ட நிலையில் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிந்ததுடன், அவரைக் கொலை செய்த சினிமா இயக்குநரான அவரின் கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். போலீஸ் விசாரணையில், கணவரின் சந்தேகமே கொலை வரை சென்றிருப்பது தெரியவந்திருக்கிறது.

அந்தப் பெண்ணின் பெயர் சந்தியா. நாகர்கோவில், ஆரல்வாய்மொழி அருகில் உள்ள தெரிசனங்கோப்பு, ஞாலம் கிராமத்தைச் சேர்ந்தவர். சந்தியாவின் அம்மா பிரசன்னாவிடம் பேசினோம்.

“என் மகள் சந்தியாவுக்கும் தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணனுக்கும் 2000-ல் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணமான சில மாதங்களிலேயே என் மகளை பாலகிருஷ்ணன் அடித்து சித்ரவதை செய்துவந்தார். 2018-ல் பாலகிருஷ்ணனுடன் இனி வாழ முடியாது என்று கூறி வீட்டுக்கு வந்த சந்தியா, விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். சந்தியாவைச் சமாதானம் செய்து மீண்டும் அழைத்துச் சென்றார் பாலகிருஷ்ணன். ஜனவரி மாதத்தில் எங்களிடம் போனில் பேசிய பாலகிருஷ்ணன், சந்தியாவை வெளிநாட்டுக்கு அனுப்பப்போவதாகக் கூறினார். அதன்பிறகு சந்தியா எங்களுடன் பேசவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்தச் சமயத்தில்தான் சில நாள்களுக்கு முன்பு போலீஸார், சந்தியா கொலை செய்யப்பட்ட தகவலை போனில் கூறினார்கள். சென்னைக்கு வந்து சந்தியாவின் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். என் மகள் சாவுக்கு நீதி கிடைக்கவேண்டும். பாலகிருஷ்ணனுக்கு கடுமையான தண்டணை வாங்கிக்கொடுக்க வேண்டும்” என்றார் கண்ணீருடன்.