“விலை நீ சொல்லக்கூடாது... கேட்கிற இடத்துல கையெழுத்துப் போடு!” | Edappadi Palaniswamy relative venkatesh atrocities in Sankari - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/02/2019)

“விலை நீ சொல்லக்கூடாது... கேட்கிற இடத்துல கையெழுத்துப் போடு!”

கல்வி நிறுவன அதிபரை மிரட்டும் முதல்வரின் மைத்துனர்...

முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சுற்றி ஏற்கெனவே ஏகப்பட்ட சர்ச்சைகள் வலம்வருகின்றன. இப்போது பிரபல கல்வி நிறுவன உரிமையாளரிடம், அவருடைய இடத்தை எழுதிக்கொடுக்க வேண்டும் என்று கேட்டு முதல்வரின் மைத்துனர் கொலை மிரட்டல் விடுவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து, அந்தக் குடும்பத்தினர் தலைமறைவாக இருக்கிறார்கள்.

சங்ககிரியில் இருக்கிறது ஸ்ரீ பி.எஸ்.ஜி கல்லூரி குழுமம். இந்தக் குழுமத்தின் தலைவராக இருப்பவர் மணி. இவரது குடும்பம்தான் தற்போது உயிருக்குப் பயந்து தலைமறைவாக இருக்கிறது. வேறு ஊர் ஒன்றில் உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்திருந்த மணியைச் சந்தித்தோம். “எங்கள் குடும்பம் பாரம்பர்யமானது. எங்களை நம்பிப் பல நூறு குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றன. ஆனால் நாங்களோ, முதல்வரின் உறவினருக்குப் பயந்து, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தலைமறைவாக வாழ்ந்து வருகிறோம்’’ என்று கண்கலங்கிப் பேசத் தொடங்கினார்.