தகுதித் தேர்வு எப்போது? - கேள்விக்குறியாகும் ஆசிரியர்கள் எதிர்காலம் | Discuss about Teacher Eligibility Test - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/02/2019)

தகுதித் தேர்வு எப்போது? - கேள்விக்குறியாகும் ஆசிரியர்கள் எதிர்காலம்

மிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுகளை முறையான கால இடைவேளையில் நடத்தாமல் அரசு செய்துவரும் குளறுபடிகளால் அரசுப் பணியில் இருக்கும் ஆசிரியர்களும், ஆசிரியர் பணிக்காகப் படித்து வேலைக்காகக் காத்திருக்கும் ஆசிரியர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மத்திய அரசால் 2010-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டிலிருந்து இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்கான தகுதித் தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.

2010-ம் ஆண்டுக்குப் பிறகு, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில், ஆசிரியர் பணிக்கு வந்தவர்கள் அனைவரும் ஐந்து ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. இதற்கான காலக்கெடு 2016-ம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது. காலக்கெடுவை 2019 மார்ச் 31 வரை நீட்டித்தது தமிழக அரசு. அதுவும், இன்னும் இரு மாதங்களில் முடிவடைய இருக்கும் சூழலில், அடுத்து நடத்த வேண்டிய தகுதித் தேர்வு பற்றி உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால், அரசுப் பள்ளியில் உள்ள ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி உள்ளது.