ஆர்.துரைசாமி, கோயம்புத்தூர்-6
மனிதனின் எந்தச் செயலை வைத்து ‘காட்டுமிராண்டித்தனம்‘ என்று கூறுவது?
முதலில் இந்தச் சொல்லாடலே தவறு. மனிதனைத்தவிர அத்தனை உயிரினங்களுமே இயற்கையோடு இணைந்து வாழ்பவைதான். இயற்கையின் ஏற்பாட்டின்படி அந்த நேரப் பசிக்காக மட்டும் வேட்டையாடி உண்பவைதான். பாலியல் பலாத்காரம் என்பது அங்கே அறவே இல்லை. அவற்றின் சொத்து, சுகம் எல்லாம் இயற்கை கொடுத்திருப்பவை மட்டுமே. காட்டில் வாழும் பழங்குடிகளும் அந்த உயிரினங்களில் அடங்குவர். பெருமையடித்துக்கொள்வதற்காக ஊரையே கூட்டி விருந்து வைத்து, சமைத்ததில் பாதியை வீணே குப்பைக்கு அனுப்புபவர்கள் அல்ல அவர்கள். திட்டம் போட்டு கொள்ளையடிப்பது, கொலை செய்வது போன்ற பஞ்சமாபாதகங்களை என்னவென்றே அறியாதவர்கள் அவர்கள். எனவே, ‘காட்டு மிராண்டித்தனம்’ என்றெல்லாம் சொல்லவே கூடாது. நம்முடையே செயல்பாடுகளை வேண்டுமானால் ‘நாட்டுமிராண்டித்தனம்’ என்று சொல்லலாம்.