மிஸ்டர் கழுகு: “ஜெயிக்கவில்லை என்றால் ஜெயில்!” - அ.தி.மு.க-வுக்கு டெல்லி எச்சரிக்கை! | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/02/2019)

மிஸ்டர் கழுகு: “ஜெயிக்கவில்லை என்றால் ஜெயில்!” - அ.தி.மு.க-வுக்கு டெல்லி எச்சரிக்கை!

சுடச்சுட நாம் கொடுத்த சுக்குமல்லிக் காபியைக் குடித்துக்கொண்டிருந்த கழுகாரிடம், ‘‘தேர்தல் கூட்டணி விவகாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது... அதிலும் அ.தி.மு.க-தான் முன்னால் இருப்பதாகத் தெரிகிறதே?” என்றோம்.

‘‘தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, தேர்தல் களத்தில் இறங்கி, வியூகம் வகுப்பது ஜெயலலிதாவின் ஸ்டைல். அதையே இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கையில் எடுத்துள்ளார். விருப்ப மனு வழங்கும் பணிகள் தொடங்கியது அப்படித்தான். அமைச்சர்களின் உறவினர்கள் பலரும், விருப்ப மனுக் கொடுத்துள்ளனர். குறிப்பாக, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தர், அமைச்சர்கள் சி.வி.சண்முகத்தின் அண்ணன், சம்பத்தின் மகன், வீரமணியின் உறவினர் என அமைச்சர்களின் ரத்தப் பந்தங்கள் வரிசையாக மனுக்களை வாங்கியுள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட உள்ள அமைச்சர்களே, தங்கள் உறவுகளுக்கு சீட் கேட்டுக் களத்தில் இறங்கவுள்ளனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இந்தக் கோதாவில் குதித்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்”

‘‘ஓ.பி.எஸ் கதையைச் சொல்கிறீரா?”

‘‘ஆமாம்! ‘என் மகன் அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர். அவர் சீட் கேட்பது தார்மீக உரிமை. இதில் என்ன தவறு இருக்கிறது?’ என்று கேட்டுள்ளார். தேனி தொகுதியை ரவீந்தர் குறிவைத்துள்ளாராம். அந்தத் தொகுதியில் இப்போதே ஓ.பி.ஆர் என்ற அடைமொழியோடு வாழ்த்து போஸ்டர்களும் பளிச்சிடுகின்றன.’’

‘‘ம்! தி.மு.க-வில் ஏன் இன்னும் விருப்ப மனு வாங்காமல் இருக்கிறார்கள்?’’

“ஊராட்சி சபைக் கூட்டம் முடிந்து, பிப்ரவரி 5-ம் தேதிதான் சென்னைக்குத் திரும்பியுள்ளார் ஸ்டாலின். முதலில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்துப் பேச உள்ளார். அதற்குப் பிறகே கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஆரம்பிக்க உள்ளாராம். தி.மு.க சீட் பேரம் குறித்து விரிவான விவரங்களை உமது நிருபர் கவர் ஸ்டோரியாக கொடுத்துள்ளாரே... அதைப் பார்த்துக்கொள்ளும்.’’

‘‘கூட்டணி விஷயத்தில் கூலாக இருக்கும் ஸ்டாலின், ரஜினி விஷயத்தில் வருத்தமாக இருக்கிறார் என்கிறார்களே?”

நீங்க எப்படி பீல் பண்றீங்க