தி.மு.க ஊராட்சிக் கூட்டம்... என்ன கேட்கிறார்கள் மக்கள்? - என்ன சொல்கிறார்கள் தலைவர்கள்? | DMK Panchayat Council meeting - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/02/2019)

தி.மு.க ஊராட்சிக் கூட்டம்... என்ன கேட்கிறார்கள் மக்கள்? - என்ன சொல்கிறார்கள் தலைவர்கள்?

மிழகம் முழுவதுமே தி.மு.க சார்பில் ஊராட்சிக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கட்சித் தலைவர் ஸ்டாலின், மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் தொடங்கி, கட்சித் தலைவர்கள் பலரும் பங்கேற்கும் இந்தக் கூட்டங்களில் கிராம மக்கள் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்கிறார்கள். பல இடங்களில் பொறுப்பான பதில்கள் அளிக்கப்படுகின்றன. பல இடங்களில் மக்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறார்கள் தி.மு.க தலைவர்கள். பல கேள்விகளுக்கு அவர்களிடம் பதிலே இல்லை. விவசாயிகள், இல்லத்தரசிகள், முதியோர், மாணவர்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் என்று பலதரப்பினரும் கேட்கும் கேள்விகளில் தமிழகத்தின் மொத்தப் பிரச்னைகளும் எதிரொலிக்கின்றன. சரி, என்ன கேட்கிறார்கள் மக்கள்? தி.மு.க தரப்பின் ரியாக்‌ஷன் என்ன? சில சாம்பிள் மட்டும் இங்கே...