“என்னைக் கொலைசெய்து சொத்துக்களை அபகரிக்கப் பார்க்கிறார்கள்!” | kumbakonam Veerasaiva Periya Mutt Bishop interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/02/2019)

“என்னைக் கொலைசெய்து சொத்துக்களை அபகரிக்கப் பார்க்கிறார்கள்!”

குற்றம்சாட்டும் கும்பகோணம் மடாதிபதி

ன்மிகம் வளர்க்கும் மடங்களில் சர்ச்சைகள் ஏற்படுவது புதிது அல்ல. அந்த வரிசையில், கும்பகோணத்தில் இருக்கும் வீரசைவ பெரிய மடத்தில் நடந்தேறியிருக்கும் அடிதடி விவகாரங்கள், ஆன்மிகத் தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த மடத்துக்கு கர்நாடகம், இலங்கை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.600 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மடாதிபதியாக நீலகண்ட தேசிக சுவாமி இருந்துவந்தார். திடீரென இவருக்குப் பதிலாக, மடத்தின் கமிட்டி உறுப்பினர்கள், பசவ முருகசாரங்க தேசிக சுவாமிகள் என்பவரைப் புதிய மடாதிபதியாகப் பட்டாபிஷேகம் செய்துவைத்தனர். இதனால், இரு தரப்புக்கு ஏற்பட்ட அடிதடி மோதலில் புதிய மடாதிபதி விரட்டியடிக்கப்பட்டார். இந்த விவகாரம் காவல்துறை வரைக்கும் போய், வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தக் களேபரச் சூழலில், நீலகண்ட தேசிய சுவாமிகளைச் சந்தித்தோம்.

“மடத்தில் ஏன் இவ்வளவுப் பிரச்னைகள்?”

“2,000 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டது இந்த மடம். இதன் 97-வது மடாதிபதியாக நான் இருக்கிறேன். மடத்தின் நிர்வாகம் மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பானவன் நான்தான். வேறு யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. பெங்களூரு ஆரநெல்லி பகுதியில் ராமலிங்கேஸ்வரர் மடத்தின் பீடாதிபதியாகவும் நான் இருக்கிறேன். அந்த மடத்துக்குச் சொந்தமான இடத்தை பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்துக்காகக் கையகப்படுத்தியுள்ளனர். இதற்காக, ரூ.120 கோடி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. வீரசைவ மடத்தில் எனக்கு சிஷ்யர்களாக இருந்த ஜெயபிரகாஷ், வெங்கடேஷ், செந்தில்நாதன் மற்றும் இங்கு மேனேஜராக இருந்த செல்வகுமார், குருசாமி, பழனியப்பன் ஆகியோர் அந்தப் பணத்தில் ஒரு பகுதியைக் கேட்டுப் பிரச்னை செய்தனர். அதற்கு நான் உடன்படவில்லை. அதனால், எனக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள்தான் எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம். என்னைக் கொலை செய்துவிட்டுப் பணத்தை எடுத்துக்கொள்ளவும், சொத்துகளை அபகரிக்கவும் திட்டம் போடுகிறார்கள்.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க