நீதிபதிகளை உலுக்கிய தாயின் கடிதம்! | Sex abuse offenders arrested by court order - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/02/2019)

நீதிபதிகளை உலுக்கிய தாயின் கடிதம்!

சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்...

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் அளிக்கும் புகார்கள்மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்கிற புகார் பரவலாக இருக்கிறது. சமீபத்தில், கும்பகோணத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் புகார் மீது காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு புகார் கடிதம் போனது. அதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த அதிரடி உத்தரவால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கும்பகோணத்தைச் சேர்ந்தவர், அனாமிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்துவந்தார். அந்தக் கடையின் உரிமையாளரும், அவரின் நண்பர்களும் சேர்ந்து அனாமிகாவைக் கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அனாமிகாவின் தாயார் போலீஸில் அளித்த புகார் மீது நடவடிக்கை இல்லாததால், குற்றவாளிகளைக் கைதுசெய்யக் கோரி, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும் போராட்டம் நடத்தினர். அதையடுத்து, குற்றவாளிகளில் ஒருவரை மட்டும் போலீஸார் கைது செய்தனர்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க