இறுக்கத்தில் மோடி... இடிச் சிரிப்பில் எடப்பாடி! - திருப்பூர் ரெஸ்பான்ஸ் எப்படி? | Modi visit in Tiruppur - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/02/2019)

இறுக்கத்தில் மோடி... இடிச் சிரிப்பில் எடப்பாடி! - திருப்பூர் ரெஸ்பான்ஸ் எப்படி?

டந்த வாரம் மதுரைக்கு வந்துவிட்டுச் சென்ற தடம்கூட இன்னும் மறையவில்லை. அதற்குள் மீண்டும் இன்னொரு முறை தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை அரங்கேற்றியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதுவும் ஜி.எஸ்.டி-யால் சின்னாபின்னமாகிக் கிடக்கும் பின்னலாடை மாநகரமான திருப்பூரில்.

மோடியின் வருகையை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி காலை முதலே திருப்பூரில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. தன் கட்சியினருடன் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாகத் திரண்ட வைகோ, மோடி திருப்பூருக்குள் நுழையும்வரை ஆர்ப்பாட்டத்தைத் தொடரப் போவதாகத் தெரிவித்தார். கொடுக்கப்பட்ட நேரத்தைக் கடந்தும் அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களை மொத்தமாகக்  கைதுசெய்து அள்ளிக்கொண்டு போனது காவல் துறை. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கு.ராமகிருட்டிணன், கொளத்தூர் மணி, திருமுருகன் காந்தி என மற்றொரு படையும் கறுப்புக்கொடிகளுடன் களத்துக்கு வந்ததால் காவல் துறையினர் திக்குமுக்காடிப் போனார்கள்.