“முன்விடுதலையைத் தடுக்க கவர்னர் மாளிகை சூழ்ச்சி!” - வேலூர் சிறையில் கதறும் முருகன்... | Rajiv Gandhi assassination case convict Murugan letter to Governor - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/02/2019)

“முன்விடுதலையைத் தடுக்க கவர்னர் மாளிகை சூழ்ச்சி!” - வேலூர் சிறையில் கதறும் முருகன்...

‘ஏழு பேர் விடுதலையில் விருப்பம் இல்லையெனில், கருணைக் கொலை செய்துவிடுங்கள். மௌனமாக இருக்க வேண்டாம்’ என்று கடிதம் எழுதி, கவர்னர் மாளிகையை அதிரவைத்திருக்கிறார், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முருகன். இவரது கடிதத்துக்கு, கவர்னர் மாளிகையிலிருந்து பதில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘கவர்னருக்கு மனு அனுப்புவதை இத்துடன் நிறுத்திக்கொள்’ என்று முருகனை மிரட்டியதாகச் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் சிறைத்துறை டி.ஐ.ஜி-யான ஜெயபாரதி.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டு களாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்காக, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பியது. இதுதொடர்பாக, கவர்னர் எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பதால், ஏழு பேரும் கடுமையான மனஉளைச்சலில் உள்ளனர் என்று தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில், வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், கடந்த ஜனவரி 31-ம் தேதி 14 பக்கங்கள் கொண்ட ஒரு கடிதத்தை கவர்னருக்கு எழுதியிருந்தார்.