நிம்மதியாக வாழவிடாதா இந்த அரசு... கொந்தளிக்கும் கதிராமங்கலம் மக்கள்! | Kathiramangalam people protest against ONGC - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/02/2019)

நிம்மதியாக வாழவிடாதா இந்த அரசு... கொந்தளிக்கும் கதிராமங்கலம் மக்கள்!

சிறிது காலம் கொஞ்சம் அமைதியாக இருந்த கதிராமங்கலம் மீண்டும் தகிக்கத் தொடங்கியிருக்கிறது. “ ‘மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம்’ என்று சொல்லிக்கொண்டே எங்கள் நலனுக்கு எதிராகச் தமிழக அரசு செயல்படுகிறது’’ என்று கொந்தளிக்கிறார்கள் கதிராமங்கலம் மக்கள். 

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி கிணறு அமைந்துள்ள இடத்தில் கடந்த ஜனவரி 31-ம் தேதி காலையில் புனரமைப்பு என்கிற பெயரில் ஓ.என்.ஜி.சி அலுவலர்கள் பெரும் போலீஸ் படையுடன் குவிந்தனர். அப்போது அங்கு வந்த பேராசிரியர் ஜெயராமன், அவரது மனைவி சித்ரா மற்றும் ராஜு, கலையரசி, ஜெயந்தி ஆகியோர் மீது கொலை மிரட்டல் உட்பட நான்கு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்து, பேராசிரியர் ஜெயராமன், ராஜு இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு கதிராமங்கலம் மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். என்ன நடந்தது என்று ஜெயராமன் மனைவி சித்ராவிடம் கேட்டோம். “ஓ.என்.ஜி.சி கிணறு அமைந்துள்ள இடத்தில் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் குழாய் உடைந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. உடனே அந்தப் பகுதி மக்கள் என் கணவருக்குத் தகவல் தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க