ராமலிங்கம் கொலைக்குக் காரணம் மதமாற்றமா? | PMK Ramalingam Murder in Thirubuvanam - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/02/2019)

ராமலிங்கம் கொலைக்குக் காரணம் மதமாற்றமா?

மன்னிப்புக் கேட்ட பிறகும் கொலை!

மையல் வேலைக்கு ஆட்கள் கூப்பிடப்போன இடத்தில் நடந்த வாக்குவாதம், மதமாற்றச் சர்ச்சையாக மாறி, கொலையில் முடிந்திருக்கிறது.  கொலைக் குற்றம் தொடர்பாக எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ‘அவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்லர். உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்று குரல் எழுப்பியுள்ளது, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு.

கும்பகோணம் அருகே திருபுவனம் மேல துண்டிவிநாயகம்பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பா.ம.க-வில் நகரச் செயலாளராக இருந்தவர். திருபுவனத்தில் ‘தமிழன் கேட்டரிங்க் சர்வீஸ்’ என்ற பெயரில் சமையல் தொழில் செய்து வந்தார். சமையல் பணிக்கு ஆட்களைக் கூப்பிடுவதற்காக, பாகனாந்தோப்பு பகுதிக்கு கடந்த 5-ம் தேதி சென்றார். அப்போது நடந்த வாக்கு வாதத்துக்குப் பின்னர், அன்று இரவு கொல்லப்பட்டார் என்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க