அதிகரிக்கும் குடும்பக் கொலைகள்! - இந்தியக் குடும்பங்களுக்கு என்ன ஆனது? | Special Story about Family Murder - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

அதிகரிக்கும் குடும்பக் கொலைகள்! - இந்தியக் குடும்பங்களுக்கு என்ன ஆனது?

ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

ல ஆண்டுகளாகக் கணவன் மனைவியாக வாழ்ந்து, குழந்தைகளைப் பெற்று வளர்த்து, மணவாழ்வின் பாதியைக் கடந்துவிட்ட பிறகு, காதல் மனைவியையே கொடூரமாகக் கொலை செய்ததுடன், அவரது உடலைத் துண்டுத்துண்டாக வெட்டி வீசியிருக்கிறார் கணவர். எவ்வளவு ஒரு வன்மம்... கொலை செய்த பிறகும்கூட அவர் முகத்தில் பதற்றமோ, குற்ற உணர்வோ துளியும் இல்லை. மாறாக, இயல்பைத் தாண்டிய ஆசுவாசம் தென்பட்டது. இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல... கணவனை மனைவி கொல்வதும், மனைவியைக் கணவன் கொல்வதும்... பெற்றெடுத்த குழந்தைகளையே பெற்றோர் கொல்வதும் என்று குடும்பச் சிக்கல்கள், வன்முறை என்கிற வரையறையைத் தாண்டி, படுகொலை வரை நீள்கின்றன. உலகிலேயே தனித்துவம் வாய்ந்த இந்தியக் குடும்பம் என்கிற கட்டமைப்பு சிதைந்துவருகிறதா... இல்லை, தோல்வியடைந்துவிட்டதா? என்னதான் நடக்கிறது இங்கே?

முன்பெல்லாம் ரவுடிகள் கொலை... வரப்புத் தகராறில் பங்காளி கொலை என்றுதான் செய்திகள் வரும். இன்றோ, தவறாமல் இடம்பிடிக்கின்றன, குடும்பக் கொலைகள். முந்தைய காலத்தில் இதுபோன்ற உறவுச் சிக்கல்கள், வன்முறைகள் இல்லையா என்று கேள்வி எழலாம். இருந்தனதான். ஆனால், கொலை அளவுக்கு அதிகம் நடக்கவில்லை. இப்போது மட்டும் ஏன் இப்படி வன்முறைகள்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close