மிஸ்டர் கழுகு: காசு... பணம்... துட்டு... - படியாத பேரம்... முடியாத கூட்டணி! | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

மிஸ்டர் கழுகு: காசு... பணம்... துட்டு... - படியாத பேரம்... முடியாத கூட்டணி!

ந்ததுமே சுடச்சுட இஞ்சி டீயைக் குடித்துக்கொண்டே ஆரம்பித்தார் கழுகார்...‘‘இரண்டு திராவிட  கட்சிகளுமே, கூட்டணி வேலைகளைத் துரிதப்படுத்தியுள்ளன. தி.மு.க அமைத்துள்ள கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவின் கூட்டம், அறிவாலயத்தில் நடந்துள்ளது. காங்கிரஸுக்கு ஒற்றை இலக்கத்தில்தான் சீட் என்பதில் உறுதியாக இருக்கிறது தி.மு.க. விடுதலைச் சிறுத்தைகள் விவகாரத்தை, கொஞ்சம் பொறுமையாகக் கையாளச் சொல்லியிருக்கிறாராம் ஸ்டாலின்.’’

‘‘அ.தி.மு.க அணியில் என்ன நடக்கிறது?’’

‘‘அ.தி.மு.க-வுடன் கூட்டணி உறுதி என்று பி.ஜே.பி தமிழகத் தலைவர்கள் சொல்கிறார்கள். டெல்லி மேலிடத்துக்கு அவர்கள் அனுப்பியுள்ள ‘நோட்’டில், அ.தி.மு.க., பி.ஜே.பி., பா.ம.க., தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்தித்தால், இருபது தொகுதிகள் வரை கண்டிப்பாக வெல்லும்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்! கூட்டணிக்குப் பிடிகொடுக்காமலிருந்த பா.ம.க., இப்போதுதான் வழிக்கு வந்துள்ளது. அந்தக் கட்சிக்கு, ஏழு தொகுதிகள் என்று முடிவாகி இருக்கிறதாம். ஆனால், தேர்தல் செலவு விஷயத்திலும் கைகொடுக்கவேண்டும் என்பதில் பா.ம.க தரப்பு கறாராக இருப்பதுதான், அ.தி.மு.க முக்கியப் புள்ளிகளையே கடுப்பேற்றியிருக்கிறதாம்.”

‘‘அப்படியா?”

“பா.ம.க-விடம் கடந்த ஒரு மாதமாக தி.மு.க., அ.தி.மு.க என இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இப்போது பா.ம.க கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால், கரன்சி பற்றிய பேச்சே முக்கிய இடம் பிடித்திருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே தி.மு.க கைவிரித்துவிட்டதால், அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. ஆனால், இவர்களின் எதிர்பார்ப்பைக் கண்டு ஆளுங்கட்சியே அதிர்ந்துவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளும்.!’’
‘‘பின்னே, தேர்தல் என்றால் சும்மாவா? செலவுகள் இருக்கும்தானே!’’

‘‘அ.தி.மு.க-வின் கஜானாவாகச் செயல்படும் சேலத்துப் பிரமுகர்தான் பா.ம.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். ஆனால், ‘கரன்சி விஷயத்தில் நான் மட்டும் முடிவெடுக்க முடியாது’ என்று பந்தை மேலே தள்ளிவிட்டுவிட்டாராம் அந்தப் பிரமுகர். எடப்பாடி தரப்பு, ‘கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம்’ என்று பா.ம.க விஷயத்தைக் கிடப்பில்போட்டுவிட்டதாம். ஆனால், டெல்லியிலிருந்து பி.ஜே.பி-யின் பிரஷர் அதிகமாகவே, வேறு ரூட்டை கையில் எடுத்திருக்கிறாராம் எடப்பாடி!’’

‘‘அது என்ன ரூட்?’’

‘‘பா.ம.க-விடம் நீங்களே பேச்சுவார்த்தை நடத்தினால்தான் சரியாக வரும் என்று அ.தி.மு.க தரப்பு ஒதுங்கியுள்ளது. ஆனால், நடந்தது வேறாகிவிட்டது! மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நேரடியாக அனுப்பத் தீர்மானித்து, ராமதாஸின் உதவியாளர் நடராஜிடம் பேசி, சந்திப்புக்கு நேரம் கேட்கப்பட்டதாம் பி.ஜே.பி தரப்பிலிருந்து. ஆனால், ராமதாஸ் பிடி கொடுக்கவே இல்லையாம். தமிழக பி.ஜே.பி பொறுப்பாளர் பியூஸ் கோயலுக்குத்தான் தைலாபுரக் கதவுகள் திறந்துள்ளன!’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close