கழுகார் பதில்கள்! | Kazhugar Questions And Answers - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

கழுகார் பதில்கள்!

@கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்-6.
பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய். வறட்சிக்கு இரண்டாயிரம் ரூபாய். பயங்கர பிளானாக இருக்கிறதே?


நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். தினகரன், தி.மு.க., தேர்தல் கமிஷன் அல்லவா கவலைப்பட வேண்டும்.

எம்.டி. உமாமகேஸ்வரன், சென்னை-96.

‘கவர்ச்சிகரமான மோசடி முதலீட்டுத் திட்டங்களுக்குத் தடை’ என்று நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதே?


‘கவர்ச்சிகரமான தேர்தல் மோசடித் திட்டங்களுக்கு தடைவிதிக்கும் மசோதா’ என்றே என் காதில் விழுகிறது!

@ஞானப்பிரகாஷ், தொம்பக்குளம்.
ஐரோப்பியர்கள் எழுதிச்சென்றிருக்கும் இந்திய வரலாற்றைத்தான் பரவலாகப் பயன்படுத்தி வருகிறோம். நாம் ஏன், அதை மாற்றி எழுதக்கூடாது?


இந்தியர்கள் எழுதினாலும்கூட வடக்கு, தெற்கு என்று அதிலும் பாரபட்சங்கள் நிலவுகின்றனவே! தமிழகத்தின் ஆதிச்சநல்லூர், கீழடி போன்ற இடங்களில் கிடைத்துள்ள சான்றுகள், சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் முற்பட்டவை. இதை வலியுறுத்தப் பார்க்கும் தமிழகத்தைச் சேர்ந்த மத்தியத் தொல்பொருள் ஆய்வாளர்களைக்கூடப் பந்தாடுகிறார்கள் டெல்லிவாலாக்கள். ஆக, வரலாறு என்பது எழுதிவைத்தவர்கள், எழுதச் சொன்னவர், எழுத நினைப்பவர்களின் சுயவிருப்புவெறுப்புகளுடன்தான் பெரும்பாலும் இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close