எங்கள் நிபந்தனையை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி! - ‘கொங்கு’ ஈஸ்வரன் கறார் | Kongunadu Makkal Desia Katchi - Eswaran interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

எங்கள் நிபந்தனையை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி! - ‘கொங்கு’ ஈஸ்வரன் கறார்

ரண்டாம் உலக கொங்குத் தமிழர் மாநாட்டைப் பிரமாண்டமாக நடத்தி, திராவிடக் கட்சிகளிடம் ‘டிமாண்டை’ கூட்டியிருக்கிறது, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி. இன்னொரு பக்கம் கொங்கு சமுதாயத்திலேயே ஈஸ்வரன் மீது எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. மாநில கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையினர், ‘கொங்கு சமுதாய மக்களுக்கு விரோதமாகச் செயல்படும் ஈஸ்வரனைத் தோற்கடிப்போம்’ என்று தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். இந்த நிலையில், ஈஸ்வரனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“உங்கள் கட்சி சமீபத்தில் நடத்திய இரண்டாம் உலக கொங்குத் தமிழர் மாநாட்டின் நோக்கம் என்ன?”

“நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், நாங்கள் எவ்வளவு வலுவாக இருக்கிறோம் என்று பிற கட்சிகளுக்குக் காட்ட வேண்டியிருக்கிறது. 2009-ல் கருமத்தம்பட்டியில் முதல் அரசியல் மாநாடு நடத்தினோம். பத்து வருடங்களுக்குப் பின்பு, அதைவிட இரு மடங்கு கூட்டத்தை நாமக்கல்லில் கூட்டியிருக்கிறோம். இந்த மாநாட்டின் மூலம் அனைத்துக் கட்சிகளுக்கும் எங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறோம்.”  

“சீட்டுக்காகத் தேர்தல் நேரத்தில், சிறு கட்சிகள் மாநாடுகள் நடத்துகின்றன என்கிற விமர்சனம் குறித்து?”

“தவறு. ஈரோட்டில் நதிநீர் இணைப்பு மாநாடு நடத்தினோம். கிருஷ்ணகிரி, கோவை, பெருமாநல்லூர், சித்தோடு ஆகிய இடங்களில் பாசனத் திட்டங்கள், மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி மாநாடுகளை நடத்தினோம். அவினாசி - அத்திக்கடவு திட்டத்துக்காக 186 கி.மீ நடைப்பயணம் சென்றிருக்கிறோம். திருமணிமுத்தாறு திட்டத்துக்காக, தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறோம். எங்களுக்கு அரசியல் என்பது பத்து சதவிகிதம்தான். 90 சதவிகிதச் செயல்பாடுகள் சாமானிய மக்களுக்கானவை. நாங்கள் தேர்தல் ஆதாயத்துக்காக மட்டும் மாநாடு நடத்துபவர்கள் அல்ல.”

[X] Close

[X] Close