இளவரசிக்கு செக்! - ஜனநாயகமா, அரச குடும்ப மாண்பா? - தவிக்கும் தாய்லாந்து! | Thailand election - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

இளவரசிக்கு செக்! - ஜனநாயகமா, அரச குடும்ப மாண்பா? - தவிக்கும் தாய்லாந்து!

ந்து ஆண்டு ராணுவ ஆட்சிக்குப் பிறகு தாய்லாந்து நாட்டில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டின் இளவரசி உபோல்ரத்தனா தாக்கல் செய்த பிரதமர் பதவிக்கான வேட்புமனுவை நிராகரித்துவிட்டது அந்நாட்டின் தேர்தல் ஆணையம். இதனால், உல்லாசபுரியாகப் பேர் எடுத்த தாய்லாந்து, உஷ்ணபுரியாக மாறியிருக்கிறது.

தாய்லாந்து மன்னர் மஹா வஜிரா ரலாங்கரின் மூத்த சகோதரி மற்றும் நாட்டின் இளவரசி, உபோல் ரத்தனா ராஜகன்யாவை தாய் ரக்சா சார்ட் கட்சி, தனது பிரதம வேட்பாளராக அறிவித்தது. எந்தக் கட்சியின் ஆட்சி ஊழல் குற்றத்துக்காக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் தூக்கியெறியப்பட்டதோ, அந்தக் கட்சியின் சார்பாக இளவரசி போட்டியிடுவதும் ஆச்சர்யத்தைக் கூட்டியது. இந்த தடாலடி அறிவிப்பால் அரச குடும்பம் ஆடிப்போனது. ஏனெனில், தாய்லாந்து அரச பரம்பரையில் இதுவரை யாரும் தேர்தலில் போட்டியிட்டதில்லை. எனவே, இளவரசி வேட்புமனுத் தாக்கல் செய்தபோதே, இது அரச பரம்பரையில் தொன்றுதொட்டு இருக்கும் வழக்கத்துக்கு எதிரானது என்று கடும் கண்டனத்தைத் தெரிவித்தார் மன்னர் வஜிரா ராலங்கர். அரசியலுக்கு அப்பாற்பட்டிருக்கும் அரச குடும்பத்தின் பாரம்பர்ய வழக்கத்துக்கு குந்தகம் வந்துவிடும் என்பது அவரது வாதம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close