ஆபரேஷன் தாமரை... அசிங்கப்பட்ட பி.ஜே.பி! | Current Political Status of Karnataka - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

ஆபரேஷன் தாமரை... அசிங்கப்பட்ட பி.ஜே.பி!

‘உலகிலேயே அதிவேகமாக உயர்வது தங்கத்தின் விலையோ, நிலத்தின் விலையோ அல்ல; எம்.எல்.ஏ-வின் விலைதான்’ என்று கர்நாடக மக்கள் கேலி செய்கிறார்கள். 1983-ம் ஆண்டு ஒரு கர்நாடக எம்.எல்.ஏ-வின் விலை இரண்டு லட்ச ரூபாயாக இருந்தது. இப்போது 25 கோடி ரூபாய். ராமகிருஷ்ண ஹெக்டேவின் ஜனதா கட்சி ஆட்சியைக் கவிழ்க்க, அந்தக் கட்சியின் சில எம்.எல்.ஏ-க்களுக்கு இரண்டு லட்ச ரூபாய் தருவதாகப் பேரம் பேசி, காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி முன்பு ஒருமுறை ஆடியோ பதிவில் சிக்கினார். இப்போது எடியூரப்பா.

224 எம்.எல்.ஏ-க்கள் பலமுள்ள கர்நாடக சட்டமன்றத்தில் 104 எம்.எல்.ஏ-க்களுடன் தனிப்பெரும் கட்சியாக பி.ஜே.பி இருக்கிறது. ஆனால், 80 எம்.எல்.ஏ-க்களுடன் காங்கிரஸ், 38 எம்.எல்.ஏ-க்கள் பலமுள்ள ம.ஜ.த-வுடன் கூட்டணி அமைத்து, அந்தக் கட்சியின் குமாரசாமியை முதல்வர் ஆக்கியது. எப்படியும் இரண்டு கட்சிகளுக்குள் சண்டை வரும்; ஆட்சி கவிழும் என்று எதிர்பார்த்தது பி.ஜே.பி. ஆனால், நடக்கவில்லை. வெறுத்துப்போன பி.ஜே.பி., ஆட்சியைக் கவிழ்க்கும் வேலைகளைத் தொடங்கிவிட்டது. இதுவரை நான்கு முறை நடைபெற்ற முயற்சிகளை காங்கிரஸ் கூட்டணி வெற்றிகரமாக முறியடித்துவிட்டது. 

2014 தேர்தலில் கர்நாடகத்தின் 28 எம்.பி தொகுதிகளில் 17 இடங்களைப் பிடித்தது பி.ஜே.பி. இம்முறை 22 இடங்களைப் பிடிக்க இலக்கு வைத்திருக்கிறது. அதற்காக இரண்டு விஷயங்களைச் செய்ய நினைக்கிறது அந்தக் கட்சி. முதல் விஷயம், இந்த ஆட்சியை வீழ்த்துவதன் மூலம் காங்கிரஸுக்கும் ம.ஜ.த-வுக்கும் கசப்பு உணர்வை ஏற்படுத்திக் கூட்டணியை முறியடிப்பது. இரண்டாவது விஷயம், இந்த ஆட்சி இருந்தால், இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கக்கூடும். அப்படி நடந்தால், கர்நாடகத்தில் பி.ஜே.பி ஆறு எம்.பி தொகுதிகளை ஜெயிப்பதே பெரிய விஷயம். எனவே, ஆட்சி வீழ்ந்தால், இந்தக் கூட்டணி நிலைக்காது என்று பி.ஜே.பி கருதுகிறது. மாநிலத்தின் ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தால், இதைச் செய்வது சௌகர்யம்.

[X] Close

[X] Close