“போன மாதம் ஆயிரம் புன்னகை... இந்த மாதம் இரண்டாயிரம் புன்னகை!” | TN Assembly Interesting incidents - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

“போன மாதம் ஆயிரம் புன்னகை... இந்த மாதம் இரண்டாயிரம் புன்னகை!”

சட்டசபை கலகல காட்சிகள்!

ட்டசபை என்றாலே சட்டைக் கிழிய வேண்டும் என்று அர்த்தமல்ல. பெரும் மாண்புகொண்ட அந்தச் சபையில், சில சமயங்கள் அப்படியான அசந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அனல் பறந்த விவாதங்களையேகூட சாதுர்ய வார்த்தைகளால் அலங்கரித்த சிறப்பைக் கொண்டது தமிழ்நாடு சட்டசபை. கருணாநிதி, எம்.ஜி.ஆர் தொடங்கி ஜெயலலிதா ஆட்சிவரை இதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முறை. இவரது சட்டப் பேரவையிலும் சுவாரஸ்ய உரையாடல்களுக்குக் குறைவில்லை. இதோ... 

வடக்கத்தியக் காற்றும்... பிரியாணி வாசனையும்!

பட்ஜெட் குறித்தான விவாதத்தில் பேசிய மனித நேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி, “பட்ஜெட்டில் பஞ்சாமிர்தமும் (பழனிசாமி), பன்னீரும் (ஓ.பி.எஸ்) மணக்கிறது. ஆனால், பிரியாணி (இஸ்லாமியர்கள்) வாசனையை மட்டும் காணோம்” என்று சிறுபான்மையினருக்கு எந்த அறிவிப்பும் இல்லை என்பதைச் சுட்டிகாட்ட, அ.தி.மு.க-வினரே சிரித்துவிட்டனர். தொடர்ந்து பேசிய அவர், “முதல்வரே... போன மாதம் ஆயிரம் புன்னகை யோடு சிரித்தீர்கள்... இந்த மாதம் இரண்டாயிரம் புன்னகையோடு சிரிக்கிறீர்கள், உங்கள் பக்கம் இப்போது காற்று வீசுகிறது... ஆனால், வடக்கே இருந்து வரும் வாடைக்காற்று, அதைக் கெடுத்துவிடக் கூடாது” என்றார். அதாவது, பி.ஜே.பி-யுடன் இணைய வேண்டாம் என்பதையே தமீமுன் அன்சாரி அவ்வாறு குறிப்பிட்டார் என்கிறார்கள். இதற்கும் எதிர்க் கட்சியினர் மட்டுமல்லாமல் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களும் வாய்விட்டுச் சிரித்துவிட்டார்கள்.

[X] Close

[X] Close