“கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும் வித்தியாசம் இல்லை!” - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பளீச் | TN Congress Leader K.S.Azhagiri interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

“கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும் வித்தியாசம் இல்லை!” - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பளீச்

மிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரான கே.எஸ்.அழகிரியின் சொந்த ஊர், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் திருப்பணிநத்தம் கிராமம். பசுமையான சூழலில் அமைதி தவழ இருந்துவந்த அழகிரியின் இல்லம், இப்போது கதர் சட்டைக்காரர்களின் வருகையால் பரபரப்பாகி இருக்கிறது. புதிய தலைவராகப் பொறுப்பேற்றப் பின்னர், கடந்த 11-ம் தேதி தனது சொந்த ஊருக்கு வந்தார், கே.எஸ்.அழகிரி. கீரப்பாளையத்தில் பட்டாசு, மேளதாளத்துடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர், காங்கிரஸ் தொண்டர்கள். பிஸியாக இருந்த அழகிரியிடம் ஜூ.வி-க்காக சில கேள்விகளை முன் வைத்தோம். 

“காங்கிரஸ் என்றாலே கோஷ்டிபூசல்தான். நீங்கள் எப்படிச் சமாளிக்கப்போகிறீர்கள்?”

“எனக்கு கோஷ்டிபூசலில் எல்லாம் நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் இயக்கம் ஜனநாயகத் தன்மையுடன் கூடிய இயக்கம். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த என்னால், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக வர முடிகிறது என்றால், அதற்கு அந்த ஜனநாயகத் தன்மைதான் காரணம். மற்ற கட்சிகளில் இல்லாத ஜனநாயகம் இது. சில விஷயங்களில் கட்சியில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதனால் சிலர் உணர்ச்சிவசப்பட்டு, தனிப்பட்ட விமர்சனங்களை வைக்கலாம். அதுவே கோஷ்டியாக மாறுகிறது. எனக்கு யாருடனும் எந்த முரண்பாடும் கிடையாது. எல்லோரையும் அரவணைத்து, சுமுகமாகப் பயணம் செய்வேன்.”

“வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?”

“கட்சித் தலைமை அனுமதித்தால் போட்டியிடுவேன்.”

[X] Close

[X] Close