மினி மீல்ஸ் | Political Bit News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

மினி மீல்ஸ்

பிரியாணி போச்சே!

மிழகம் முழுவதும் ஊராட்சி சபைக் கூட்டங்களை தி.மு.க-வினர்  நடத்திவருகின்றனர். சுவாமிமலையில் ஊராட்சி சபைக் கூட்டம் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. வடக்கு மாவட்டச் செயலாளரான கல்யாணசுந்தரம் கலந்துகொண்டு மக்களிடம் குறைகளைக் கேட்டார். இதில் சுமார் 400-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே பிரியாணி வழங்குவதற்காக டோக்கன் கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட பிரியாணியை வாங்குவதற்கு மக்கள் முண்டியடித்தனர். ஆனால், டோக்கன் வைத்திருந்தவர்கள் அனைவருக்கும் பிரியாணி கொடுக்க முடியவில்லை. இதனால், பெரும் சலசலப்பு ஏற்பட்டது. “கூட்டத்துக்கு வந்தால் பிரியாணி தருகிறோம் எனக் கூறி அழைத்து வந்தார்கள்; இப்போது இல்லை என்கிறார்கள்” என்று புலம்பியபடி சென்றனர் மக்கள்.

[X] Close

[X] Close