கவர்னரை சிறைப்பிடித்த புதுச்சேரி முதல்வர்! | Puducherry CM Narayanasamy vs Governor Kiran Bedi - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

கவர்னரை சிறைப்பிடித்த புதுச்சேரி முதல்வர்!

உச்சத்தில் கிரண் பேடி - நாராயணசாமி மோதல்

புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி - முதல்வர் நாராயணசாமி இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. ‘மாநிலத்தின் 39 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’ என்ற நிபந்தனையுடன், பிப்ரவரி 13-ம் தேதி மாலை முதல்வர் நாராயணசாமி தன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களுடன் கவர்னர் மாளிகை முன் முற்றுகையிட்டு கவர்னரைச் சிறைப்பிடித்தார். அன்று இரவு முழுவதும் தன் மாளிகையைவிட்டு வெளியேற முடியாமல் தவித்த கிரண்பேடியை, மறுநாள் காலையில் துணை ராணுவப் படை வந்து அழைத்துச்சென்றது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close