‘திடீர்’ ரவுடிகளால் ‘திகில்’ நகரமாகும் திருச்சி! | Trichy crimes - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

‘திடீர்’ ரவுடிகளால் ‘திகில்’ நகரமாகும் திருச்சி!

ஒரு ஃப்ளாஷ்பேக். 2001, மே மாதம். திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த ரவுடி குட்டை ஜேம்ஸ் என்பவரை, பட்டப்பகலில் வெட்டிச் சாய்த்தது ஒரு கும்பல். 2004, ஜூலை மாதம் இந்த வழக்கில் சாட்சி சொல்ல, ஜேம்ஸின் அண்ணனும் அப்போதைய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளருமான சேட்டு, ரவுடி டிங்கி, சுரேஷ் ஆகியோர் நீதிமன்றத்துக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர். காரை வழிமறித்த கும்பல் ஒன்று, மூவரையும் வெட்டிச் சாய்த்தது. இந்தக் கொலை வழக்கில் ரவுடிகள் முட்டை ரவி, மணச்சநல்லூர் குணா, சுந்தரபாண்டி உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தக் காலகட்டத்தில் வழக்கில் தொடர்புடைய முட்டை ரவி, முனி ஆனந்த், ஜெயக்குமார் ஆகியோர் இறந்துவிட்டனர். இந்த வழக்கில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் குணா, சுந்தரபாண்டி, முருகன், டீக்கடை மனோகரன் ஆகிய நான்கு பேருக்கு தலா மூன்று ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

இப்போது, திருச்சியில் மீண்டும் ரவுடிகள் ராஜ்ஜியம் தலையெடுத்திருப்பதாகப் புகார்கள் குவிகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close