பெரம்பலூர் பள்ளியில் தொடரும் தற்கொலைகள்! | Private school Students Continuous suicides in Perambalur - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

பெரம்பலூர் பள்ளியில் தொடரும் தற்கொலைகள்!

நூறு சதவிகித தேர்ச்சி டார்ச்சர் காரணமா?

ஒரு மாணவன் குறைவாக மதிப்பெண் வாங்கினால்கூட பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று கருதும் தனியார் கல்வி நிறுவனங்கள், சுமாராகப் படிக்கும் மாணவர்களை வதைப்பதும், அதன் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதும் அதிகரித்து வருகிறது. பெரம்பலூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளியில், விடுதியில் தங்கி ப்ளஸ் டூ படித்துவந்த மாணவன் உதயநிதி, கடந்த 3-ம் தேதி தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கெனவே இதே பள்ளியில் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன. 

மகனைப் பறிகொடுத்த பெரும் துயரத்தில் இருந்தார், அரியலூர் மாவட்டம் செட்டி திருக்கோணத்தைச் சேர்ந்த உத்தாண்டம். ‘‘தவமிருந்து பெற்ற பிள்ளை உதயநிதி. நான் படிப்பறிவு இல்லாதவன். அதனால், என் மகனை எவ்வளவு செலவு செய்தாவது படிக்க வைக்க வேண்டுமென்று சென்னையில் தங்கி கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கி சம்பாதிக்கிறேன்.  எட்டாம் வகுப்பிலிருந்து என் மகன் ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளி ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறான். பத்தாம் வகுப்பில் அவன் 476 மார்க் வாங்கினான். படிப்பில் என் பையனைக் குறைசொல்ல முடியாது. என் மனைவி அடிக்கடி போய் பிள்ளையைப் பார்த்துவிட்டு வருவாள். அவளிடமும் உதயநிதி, ‘நான் நல்லா இருக்கிறேன்’ என்றுதான் சொல்லியிருக்கிறான். பிப்ரவரி 3-ம் தேதி சாயங்காலம்கூட எனக்கு போன் செய்து நல்லபடியாகத்தான் பேசினான். ஆனால், போன் பேசிய நான்கு மணி நேரத்தில் தூக்கு மாட்டியிருக்கிறான் என்றால், அங்கே என்ன நடந்தது? என் மகனின் முதுகு, கை பகுதிகளில் காயங்கள் உள்ளன. நாங்கள் உதயநிதியின் நண்பர்களிடம் பேச பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை.  என் மகன் இறப்பில் எங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது. என் மகனின் சாவுக்கு நீதி வேண்டும்” என்றவர் உடைந்து அழத்தொடங்கினார். 

[X] Close

[X] Close