திருப்போரூர் ‘திடீர்’ ஆதீனம்! - நியமனம் சரியா, தவறா? கலக்கத்தில் கந்தசாமி பக்தர்கள்... | Thiruporur Kandaswamy Temple Adheenam controversy - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

திருப்போரூர் ‘திடீர்’ ஆதீனம்! - நியமனம் சரியா, தவறா? கலக்கத்தில் கந்தசாமி பக்தர்கள்...

திருப்போரூரில் சுமார் ரூ.4,000 கோடி மதிப்புள்ள சொத்துகளைக்  கொண்ட கந்தசாமி கோயிலுக்கு புதிய ஆதீனம் நியமிக்கப்பட்டதில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. புதிய ஆதீனத்தை கோவை பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் நியமித் துள்ளனர். ஆனால், இந்த நியமனம் செல்லாது என்று கூறுகிறது, இந்து அறநிலையத்துறை. இந்நிலையில், ரூ.4,000 கோடி சொத்துகளைக் குறிவைத்துச் சிலர் பிரச்னை செய்வதாகப் பக்தர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம், பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ளது திருப்போரூர் கந்தசாமி திருக்கோயில். கி.பி 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயில், முருகன் போர் புரிந்த ஸ்தலங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் 680 ஏக்கர் நிலங்களும், ரூ.100 கோடி மதிப்பிலான கட்டடங்களும் உள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.4,000 கோடியைத் தாண்டும் என்கின்றனர் பக்தர்கள். திருப்போரூர் கந்தசாமி கோயில் ஆதீனமாக இருந்த சிதம்பர சிவஞான சுவாமிகள், 2012-ம் ஆண்டு இறந்துவிட்டார். புதிய ஆதீனத்தைத் தேர்வு செய்வதில் பிரச்னை நீடித்துவந்தது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பக்தர்கள் சிலர், “பிரச்னை நீடித்துவந்த நிலையில், இந்தக் கோயிலின் பக்தர்கள், கோவை பேரூர் ஆதீனமான மருதாச்சல அடிகளாரைச் சந்தித்தனர். இவர்தான், கந்தசாமி கோயில் ஆதீனத்தை நியமிப்பதற்கான அதிகாரம் கொண்டவர். ஆனால், `கடந்த முறை திருப்போருர் ஆதீனமான சிதம்பர சிவஞான சுவாமிகளை நியமித்தது என் தந்தைதான். எனவே, இந்த முறையும் எங்களைக் கேட்டுத்தான் புதிய ஆதீனத்தை நியமிக்க வேண்டும்’ என்று மயிலம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் பிரச்னை செய்தார். இந்த விவகாரத்தை முதல்வர் தரப்புக்குக் கொண்டு சென்றோம். `ஆதீனத்தை நியமித்துவிட்டு மனு ஒன்றைக் கொடுங்கள்’ என்று முதல்வர் தரப்பில் சொல்லப்பட்டது. இதையடுத்து, தன் சீடரான சிதம்பர சோனாசல அடிகளாரைப் புதிய ஆதீனமாக நியமித்துக் கடந்த 7-ம் தேதி பட்டாபிஷேகம் நடத்தினார், பேரூர் மருதாச்சல அடிகளார். `இந்தப் பட்டாபிஷேகத்தை ஏற்க மாட்டோம்’ என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆதீனம் இல்லாவிட்டால், ரூ.4,000 கோடி சொத்துகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிடலாம் என்று நினைக்கும் சிலர், புதிய ஆதீனம் நியமனத்தை எதிர்க்கின்றனர்.

[X] Close

[X] Close