நூறு ரூபாய்க்காக... நொறுக்கப்பட்ட தள்ளுவண்டி கடை! | Street vendor vehicle was attacked by Chennai Police - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

நூறு ரூபாய்க்காக... நொறுக்கப்பட்ட தள்ளுவண்டி கடை!

மாமூல் தராததால் சூறையாடிய காவலர்கள்!

சென்னையில் கல்லூரி மாணவர் ஒருவர் பிழைப்புக்காக நடத்திவந்த தள்ளுவண்டிக் கடையை, நூறு ரூபாய் லஞ்சம் கொடுக்காததால், சற்றும் மனிதாபிமானம் இல்லாமல் அடித்து நொறுக்கியுள்ளனர் போலீஸார். ஆத்திரத்தில் அவர்கள் கடையை அடித்து நொறுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.

சென்னை பெரியமேடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துர் ரஹ்மான். ராயப்பேட்டைப் புதுக்கல்லூரியில் பி.ஏ அரபு மொழி இரண்டாம் ஆண்டு பயிலும் இவர், மாலை நேரத்தில் பெரியமேடு சாமி தெருவில் தள்ளுவண்டியில் சிக்கன் பிரியாணி விற்றுவருகிறார். கடந்த பிப்ரவரி 8-ம் தேதி வியாபாரத்தை முடித்துவிட்டு, தள்ளு வண்டியைக் கட்டி வைத்துவிட்டுச் சென்றவர், மறுநாள் காலை வந்து பார்த்த போது அவரது கடை அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. அருகில் இருந்த பிரியாணி கடையில் மாட்டியிருந்த சி.சி.டி.வி கேமராவில், பதிவான காட்சிகளை வைத்து, யார் கடையை அடித்து நொறுக்குகினார்கள் என்று அவர் பார்த்திருக்கிறார். அந்தக் காட்சியில், காவலர் சீருடையில் வந்த ஐந்து பேர் கடையை அடித்து உடைப்பது பதிவாகியிருந்தது. இதையடுத்து தனது கடையைச் சூறையாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அப்துர் ரஹ்மான் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருக்கிறது காவல் துறை.

[X] Close

[X] Close