புல்வாமா தாக்குதல்... புரிந்துகொள்ள வேண்டியது என்ன? | Discuss about Pulwama Attack - Junior Vikatan | ஜூனியர் விகடன்
கமிஷனுக்காக கலங்கடித்தாரா பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/02/2019)

புல்வாமா தாக்குதல்... புரிந்துகொள்ள வேண்டியது என்ன?

புல்வாமா தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டது, நாடு முழுக்கத் தேசபக்தி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வீதிகளில் தொடங்கி, வாட்ஸ்அப் குழுக்கள்வரை பலரும் எழுதும் தீர்ப்பு, ‘பாகிஸ்தான்மீது போர் தொடுக்க வேண்டும்’ என்பதே! இந்தச் சூழலில் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகளைத் தாண்டி, அரசும் மக்களும் என்ன செய்ய வேண்டும்?

புல்வாமா... புதிய அச்சங்கள் என்ன?

சமீப ஆண்டுகளில் காஷ்மீரில் இவ்வளவு பயங்கரமான தாக்குதல் நிகழ்ந்ததில்லை. வாகனங்களில் வெடிமருந்துகளைக் கொண்டுவந்து மோதும் தாக்குதல் 2005-க்குப் பிறகு காஷ்மீரில் நடக்கவில்லை. ஐ.இ.டி எனப்படும் வெடிமருந்துகளைப் பயன்படுத்திப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்துள்ள தாக்குதல் இது. மேலும், காஷ்மீர் இளைஞன் ஒருவனைத் தற்கொலைப் படைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தியிருப்பது, இதுவே முதல்முறை. இதற்கு முன் நிகழ்ந்த காஷ்மீர் சட்டமன்றத் தாக்குதல், பதான்கோட் மற்றும் உரி தாக்குதல்களில் பாகிஸ்தானிய தீவிரவாதிகளோ, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து வந்தவர்களோ தான் தற்கொலைப் படையாக இருந்தனர். காஷ்மீர் முஸ்லிம்கள் மரபார்ந்த நம்பிக்கையாகவே தற்கொலை முயற்சிகளை விரும்புவதில்லை. இந்த மரபு மாறியிருப்பதுதான், நம் பாதுகாப்புப் படைகளைத் திகைக்கவைத்துள்ளது. ‘இன்னும் எத்தனை பேர் இப்படி மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனரோ’ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எல்லை தாண்டி வரும் தீவிரவாதிகளைக் கண்காணிப்பதே கடினம் என்கிற சூழலில், இங்கிருந்தே உருவாகும் தீவிரவாதியைக் கண்டறிவது மிகக் கடினம்.

[X] Close

[X] Close