முடிவுக்கு வருமா ‘முகமதுவின் போர்ப்படை’ அட்டூழியங்கள்? | Pulwama attack - Jaish-e-Mohammed atrocities - Junior Vikatan | ஜூனியர் விகடன்
கமிஷனுக்காக கலங்கடித்தாரா பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/02/2019)

முடிவுக்கு வருமா ‘முகமதுவின் போர்ப்படை’ அட்டூழியங்கள்?

துயரில் துவண்டுபோயிருக்கிறது தேசம். போரில் அல்ல, ஒரு சாதாரணப் பயணத்தில் 44 வீரர்களைப் பறிகொடுத்துவிட்டுப் பதறிக்கொண்டிருக்கிறது இந்தியா. தீர்வுகள் எட்டப்பட வேண்டுமெனில், பிரச்னையின் வேர்கள் புரிந்திருக்க வேண்டும். இருபது வயதையே எட்டாத ஓர் இளைஞனை, தற்கொலைத் தாக்குதலுக்காகத் தயார்படுத்தியிருக்கும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பின்னணி என்ன? கோரிக்கைகள் என்ன? யார் இவர்கள்? எங்கு இருக்கிறார்கள்?

முகமதுவின் போர்ப்படை!


காஷ்மீர் பிரச்னையின் கொடூரமான நிஜமுகம் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு. ‘காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைத்துவிடுங்கள்’ என்பதே இந்த அமைப்பின் கோரிக்கை. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ நீருற்றி வளர்க்கும் நச்சு விதை இது. ஆப்கன் தலிபான்களுக்கும், லஷ்கர்-இ-தொய்பாவுக்கும்  நெருக்கமானவர்கள் இவர்கள். இந்த இயக்கத்தை இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, கனடா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா, ஐ.நா சபை ஆகியவைத் தீவிரவாத இயக்கமாக அறிவித்துள்ளன. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு 2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம்மீது தாக்குதல் நடத்தியது. பின்பு 2016-ம் ஆண்டு பதான்கோட் விமானப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்தியது, அதே ஆண்டு செப்டம்பரில் உரியில் தாக்குதல் நடத்தியது. இப்போது புல்வாமா தாக்குதல்.

ஹர்கத் - உல் -முஜாஹிதீன் அமைப்பின் தலைவராக, ஒசாமா பின்லேடனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மசூத் அசாரை 1994-ம் ஆண்டு, காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் கைதுசெய்தது. 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்தி, இந்திய அரசிடம் பேரம் பேசி மசூத் அசார், அஹமத் உமர் சயீத் ஷேக், முஸ்தாக் அஹமத் ஜர்கார் ஆகிய மூவரையும் விடுதலைசெய்ய வைத்தது ஹர்கத் -உல் -முஜாஹிதீன். அன்று இந்திய அரசால் விடுதலை செய்யப்பட்ட மசூத் அசார், வெளியில் வந்ததும் 2000-ம் ஆண்டு நிறுவியதே, ஜெய்ஷ்-இ-முகமது. ‘முகமதுவின் போர்ப்படை’ என்பதே இதன் பொருள்.

[X] Close

[X] Close