கமிஷனுக்காக கலங்கடித்தாரா பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி? | Special Story about Adulterated milk - Junior Vikatan | ஜூனியர் விகடன்
கமிஷனுக்காக கலங்கடித்தாரா பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/02/2019)

கமிஷனுக்காக கலங்கடித்தாரா பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி - கலப்படப் பால் விவகாரம் ஃபாலோ அப்

‘கலப்பட பால்... கலப்பட பால்’ என்று கடந்த ஓராண்டுக்கு முன்பு தமிழகத்தையே பொங்க வைத்தார், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. ஆனால், தற்போது அதைப் பற்றி பேசுவதையே மறந்துவிட்டார். இந்நிலையில், ‘தனியார் பால் நிறுவனங்களை மிரட்டி தன் வலையில் விழ வைப்பதற்காகத்தான் பாலில் கலப்படம் என்கிற விஷயத்தையே அமைச்சர் கிளப்பிவிட்டார்’ என்கிற பேச்சுக்கள் தொடர்ந்து அலையடிக்கின்றன!

என்னதான் உண்மை என்பதைத் தெரிந்துகொள்ள, மீண்டும் களத்தில் இறங்கியது ஜூ.வி.

முன்னதாக ஒரு ஃப்ளாஷ் பேக்... ஓராண்டுக்கு முன்பு மீடியாக்களில் ‘தமிழகத்தில் விற்பனையாகும் சில தனியார் நிறுவனங்களின் பாலில் கலப்படம் செய்யப்படுகிறது’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகார் படித்தபடியே இருந்தார். கலப்பட பால் விவகாரம் தொடர்பாக ஆவின், நெஸ்லே மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களின் பால் பொருள்களை நாமும் ஆய்வுக்கு அனுப்பினோம். அவற்றில் கலப்படம் இருப்பதாக முடிவுகள் தரப்பட்டன. இந்த ஆய்வில் நமக்கு உதவிய வழக்கறிஞர் விஜய் மூலமாக அதன் முடிவுகளைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் பால் நிறுவனங்கள் மீது கடுமையான விமர்சனங்களை மீண்டும் முன்வைத்தார். இதுதொடர்பாக, ஜூ.வி-யின் 05.07.2017 தேதியிட்ட இதழில், ‘நீங்கள் அருந்தும் பாலில் கெமிக்கல்?’ -என்ற தலைப்பில் கட்டுரை வெளியிடப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாகக் குற்றச்சாட்டுகளை மறுத்தன. இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட ஆய்வகம், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய அமைப்பான ‘எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ’-யின் (fssai -Food Safety and Standards Authority of India) அங்கீகாரம் பெற்ற நிறுவனமல்ல என்று எதிர்ப்புத் தெரிவித்தன.

அடுத்து, ஜூ.வி-யின் 06.08.2017 தேதியிட்ட இதழில், ‘கலப்படமே இல்லாதது என எந்தப் பாலும் கிடையாது’ என்ற தலைப்பிலான கட்டுரை வெளியானது. இதில் பேசியிருந்த வழக்கறிஞர் விஜய், ‘‘ஆரோக்கியா பால், டோட்லா பால், விஜய் பால் ஆகிய மூன்று நிறுவனங்களின் பால் பாக்கெட்களை உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான ஆய்வகத்தில் பரிசோதனைக்கு அனுப்பினோம். மூன்றிலுமே கலப்படம் இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதைத்தான் நாங்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம்” என்று கடுமையான புகாரை முன்வைத்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close