விவேகானந்தர் சிலை... பட்டேலுக்கு உலை? - கவர்னர் மாளிகையில் துக்ளக் தர்பார்! | Vivekananda statue unveiled at Chennai Raj Bhavan - Junior Vikatan | ஜூனியர் விகடன்
கமிஷனுக்காக கலங்கடித்தாரா பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/02/2019)

விவேகானந்தர் சிலை... பட்டேலுக்கு உலை? - கவர்னர் மாளிகையில் துக்ளக் தர்பார்!

‘ஒற்றுமையின் சிலை’ எனச் சொல்லி ரூ.3,000 கோடியில் உலகின் மிகப்பெரிய சர்தார் வல்லபபாய் பட்டேல் சிலையை குஜராத்தில் திறந்துவைத்தார் பிரதமர் மோடி. ஆனால், ராஜ்பவனில் இருந்த பட்டேல் சிலையைத் தூக்கிவிட்டு, விவேகானந்தர் சிலையை அமைத்துவிட்டார்கள். அந்தச் சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்திருக்கிறார். கவர்னர் மாளிகையில் நடந்த கூத்து பற்றி விசாரித்தோம்.

நம்மிடம் பேசிய ராஜ்பவன் உயர் அதிகாரி ஒருவர், ‘‘இதுவரை தமிழ்நாட்டுக்கு நியமிக்கப்பட்ட கவர்னர்கள் இருந்தபோதெல்லாம் ராஜ்பவனில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. அந்த மாற்றங் களுக்குச் சாட்சியாக, கல்வெட்டுகளும் அமைக்கப் பட்டுள்ளன. இப்போது, முன்பு இருந்த கவர்னர்கள் செய்த மாற்றங்களையும், அவற்றுக்கான கல்வெட்டுகளையும் நீக்கிவிட்டு, ஒவ்வோர் இடத்திலும் தற்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பெயரைப் பொறிக்கும் முயற்சிகள் அரங்கேறிவருகின்றன.

இப்படித்தான் ராஜ்பவனில் இருந்த பட்டேல் சிலையை அகற்றிவிட்டு, விவேகானந்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ராஜ்பவன் மருத்துவமனை எதிரில்தான் சர்தார் வல்லபபாய் பட்டேல் சிலை அமைக்கப்பட்டிருந்தது. சுர்ஜித் சிங் பர்னாலா கவர்னராக இருந்தபோது, இதைத் திறந்து வைத்தார். இந்தச் சிலையைத்தான் இப்போது அகற்றிவிட்டு, அந்தப் பீடத்தில் இருந்த கல்வெட்டையும் நீக்கிவிட்டு, அதே பீடத்தில் விவேகானந்தர் சிலையை அமைத்திருக்கிறார்கள். ஒரு தலைவரின் சிலையை அகற்றிவிட்டு இன்னொருவரின் சிலையை வைத்த வரலாறு, ராஜ்பவனில் முதன்முறையாக அரங்கேறியிருக்கிறது. அகற்றப்பட்ட பட்டேல் சிலை எங்கு இருக்கிறது என்ற விவரம் தெரியவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close