மோட்டார் வாகன விபத்துகளும் இன்சூரன்ஸ் மோசடிகளும்! | Motor Vehicle Accident Insurance fraud in Cuddalore - Junior Vikatan | ஜூனியர் விகடன்
கமிஷனுக்காக கலங்கடித்தாரா பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/02/2019)

மோட்டார் வாகன விபத்துகளும் இன்சூரன்ஸ் மோசடிகளும்!

கடலூரைக் கதிகலங்க வைத்த மோசடி

திர்பாராமல் நிகழும் வாகன விபத்துகள், பாதிக்கப்பட்டவர்களை உடல் ரீதியாக, மன ரீதியாக, பொருளாதார ரீதியாக முடக்கிப்போட்டுவிடும். இன்னொரு புறத்திலோ, வாகன விபத்துகளின் மூலமாக ஒரு சாராருக்கு மட்டும் கூரையைப் பிய்த்துக்கொண்டு கோடிகள் கொண்டுகின்றன என்பது ஆச்சர்யம் தரும் தகவல். ஆம், மோட்டார் வாகன விபத்துக் காப்பீடு என்ற பெயரில் நீண்டகாலமாக நடந்துவரும் மிகப்பெரிய அளவிலான மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
 
தமிழகத்தில் மோட்டார் வாகன விபத்து காப்பீடு கோரும் தீர்ப்பாயங்களில், சுமார் ரூ.60 கோடி அளவுக்கு காப்பீடு கோரும் 353 போலி மனுக்கள் தாக்கலானது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றில் தொடர்புடைய வழக்கறிஞர்களுக்கு சம்மன் அனுப்பியது, சென்னை உயர் நீதிமன்றம். இந்த போலி மனுக்கள் அனைத்தையும் ஆராய்ந்து, இப்பிரச்னைக்கு உரிய தீர்வை வழங்குவதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துருவை நிபுணர் குழுவாக கடந்த ஜூலை மாதம் நியமித்து, சென்னை உயர் நீதிமன்றம். இப்படியான போலி மனுக்கள் நீதிமன்றங்களில் அதிகளவில் தாக்கலான மாவட்டங்களில் கடலூரும் ஒன்று. இந்த மோசடியில் வழக்கறிஞர்கள், காவல்துறையினர், காப்பீடு நிறுவனத்தினர் எனப் பல தரப்பினரும் சிண்டிகேட் அமைத்து செயல்பட்டுள்ளதாக பரவலாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

[X] Close

[X] Close