உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனம்... அமைச்சர், எம்.பி பணம் பெற்றனரா? | Madurai Wakf Board College Professors appointments issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்
கமிஷனுக்காக கலங்கடித்தாரா பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/02/2019)

உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனம்... அமைச்சர், எம்.பி பணம் பெற்றனரா?

சி.பி.ஐ விசாரணையால் பதவிக்குச் சிக்கல்!

துரை வக்ஃபு வாரியக் கல்லூரியில் நடைபெற்ற உதவிப் பேராசிரியர் பணி நியமனங்களில் அமைச்சர் நிலோபர் கபில், அன்வர் ராஜா எம்.பி ஆகியோர் பணம் வாங்கினர் என்ற குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்துள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், இவர்கள் இருவரும் பதவிகளை இழக்கும் சூழல் உருவாகும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மதுரையில் முகையத்ஷா சர்குரே வக்ஃபு வாரியக் கல்லூரி உள்ளது. அங்கு, 2017-ல் நடைபெற்ற உதவிப் பேராசிரியர் பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு பணி நியமனம் நடைபெற்றதாகவும், தமிழக அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் வக்பு வாரியத் தலைவரும் அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர்ராஜா ஆகியோரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close